ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மதுரையை சேர்ந்த ராமர் நாடகத்தில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். விஜய் டிவியல் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர். இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உள்ளது. இவர் பெயரிலேயே 'ராமர் வீடு' என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பானது. சில திரைப்படங்களில் அவர் கமெடியனாக நடித்தபோதும் அவை எதுவும் கவனம் ஈர்க்கவில்லை. சின்னத்திரையில் காமெடியில் கலக்கும் ராமரால் சினிமாவில் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது பெரிய கேள்வி.
இந்த நிலையில் 'அது வாங்குனா இது இலவசம்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார். ஸ்ரீஜா சினிமாஸ் சார்பில் செந்தில் ராஜன் தயாரித்து, இயக்குகிறார். கதாநாயகியாக கன்னட நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்வின் ராஜ் இசை அமைத்துள்ளார், விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குன் செந்தில்ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவர்” என்றார்.