ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அஜித்தின் 'விடா முயற்சி' நாளை(பிப்., 6) வெளிவருகிறது. மகிழ்திருமேனி இயக்கத்தில் த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படத்தில் ரெஜினா வில்லியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் பல நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்திருந்தபோதும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் அவர் நடித்திருப்பது இதுவே முதல் முறை.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : இதுவரை வெளிவந்திருக்கும் டிரெய்லரை மட்டுமே வைத்து என்னுடைய கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என யூகிக்க வேண்டாம். என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு. திரையரங்கில் பார்வையாளர்கள் என் கதாபாத்திரத்தை நிச்சயம் ரசிப்பார்கள். வேறொரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்குதான் மகிழ் என்னை அழைத்தார். ஆனால், ஒருவாரம் கழித்து இப்போது நான் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.
அஜித், அர்ஜுன் என இரு ஜாம்பவான்களுடன் நடிக்கும் வாய்ப்பை விடாமுயற்சி தந்துள்ளது. இருவரை பார்த்தும் ஆச்சர்யம் அடைந்தேன். இருவரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன். அஜர்பைஜான் நாட்டில் பாலைவனத்தில் நடித்த சண்டை காட்சிகள் வாழ்வில் மறக்க முடியாததாக இருந்தது. என்றார்.