சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
நெகட்டிவ் கேரக்டர்களில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி கடந்தாண்டு திடீரென மறைந்தார். இவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'ஆர்.பி.எம்'. இதற்கு முன் சில படங்களில் அவர் கதை நாயகனாக நடித்திருந்தபோதும் இதுவே அவரது கடைசி படம்.
'தி சவுண்ட் ஸ்டோரி' படத்தை இயக்கிய பிரசாத் பிரபாகர் இயக்கி உள்ளார். டேனியல் பாலாஜியுடன் சுனில் சுகதா, கோவை சரளா, ஒய்ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, ''நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில் அவர் 'வேட்டையாடு விளையாடு' படத்தில் நடித்திருந்ததை போல், அழுத்தமான வேடத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிரைம் வித் சஸ்பென்ஸ் திரில்லராக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறேன்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகும்” என்றார்.