ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் ரமணி வெர்சஸ் ரமணி. இதனை கே.பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனம் தயாரித்தது. நாகா இயக்கினார். இது பெரும் பெற்றி பெறவே இதன் இரண்டாவது சீசன் ரமணி வெர்சஸ் ரமணி 2.0 என்று பெயரில் ஒளிபரப்பானது.
தற்போது இந்த தொடர் ரமணி வெர்சஸ் ரமணி 3.0 என்ற பெயரில் வெப் தொடராக தயாராகிறது. இந்தத் தொடரில் முன்னணி நடிகர் ராம்ஜி மீண்டும் மிஸ்டர். ரமணியாக நடிக்கிறார் மற்றும் வாசுகி ஆனந்த் மிஸஸ் ரமணியாக நடிக்கிறார். இவர்களது மகளாக ராகினியாக பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் ராம் வேடத்தில் பரம் கனேஷ் நடிக்கிறார். கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ரெஹான் இசையமைக்கிறார்,
இந்த புதிய சீசன் குறித்து இயக்குனர் நாகா கூறியதாவது: குடும்ப வாழ்க்கை என்பது ஏற்ற தாழ்வுகள், கண்ணீர் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. எந்த குடும்பத்திலும் இதுதான் அமைப்பாக இருக்கும். இந்தப்பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல, இனம், மதம், சாதி அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்தது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பம் சில விஷயங்களில் தனித்துவமானது.
தாத்தா, பாட்டி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் செலுத்தும் வலுவான செல்வாக்கு பாதிப்புகள் எப்போதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அதனால் இன்றும் தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில் தான் வசித்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீனேஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற அதன் சொந்த பிரச்னைகள் பல உள்ளன. அவற்றை இந்த தொடர் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் தரும். என்றார். இந்த தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. எந்த ஒடிடி தளம் என்பதை தயாரிப்பு தரப்பு அறிவிக்கவில்லை.