பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா |
ராமராஜன் இயக்குனராக இருந்த காலத்தில் அவர் இயக்கிய இரண்டாவது படம் 'மருதாணி'. இந்த படத்தில் நாயகியாக கனகாவை அறிமுகப்படுத்த விரும்பினார் ராமராஜன். இதற்காக அவரது வீட்டுக்கு சென்று கனகாவின் அம்மா மாஜி நடிகை தேவிகாவிடம் கதை சொல்ல சென்றார். ஆனால் தேவிகா கதைகேட்க கூட மறுத்து விட்டார். "என் மகளுக்கு 11 வயதுதான் ஆகிறது. அவளை ஒரு பெரிய இயக்குனர் மூலம், பெரிய படத்தில்தான் நடிக்க வைப்பேன்" என்று கூறிவிட்டார்.
இதனால் ஏமாற்றத்துடன் திரும்பினார் ராமராஜன். பின்னர் அந்த படத்தில் ஷோபனா நடித்தார், பாண்டியன் நாயகனாக நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றது. பின்னர் ராமராஜன் நடிகர் ஆனார். அதிலும் வெற்றி பெற்றார்.
அதன் பிறகு 'கரகாட்டக்காரன்' படத்திற்கு ஆடிசன் நடந்தபோது தேவிகாவே ராமராஜனை தொடர்பு கொண்டு தனது மகளை நடிக்க வைக்குமாறு கேட்டார். ஆனால் 'இந்த படத்தின் நாயகிக்கு கரகாட்டம் ஆடத் தெரிய வேண்டும் உங்கள் மகள் சரிப்பட்டு வரமாட்டார்' என்று கூறிவிட்டார் ராமராஜன். அவளுக்கு நான் ஆள் வைத்து ஆடக் கற்றுக் கொடுக்கிறேன் என்றார் தேவிகா. அதன்பிறகு 'கரகாட்டக்காரன்' படத்தில் அறிமுகமானார் கனகா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'தங்கமான ராசா' என்ற அடுத்த படத்திலும் ராமராஜன் ஜோடியாக நடித்தார் கனகா.