ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கி சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் புகழ். தற்போது பிசியாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவர் தற்போது தனது சமூக வலைதளத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமான நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு, கேப்ஷனில், 'ஹாப்பி பர்த் டே பார்டனர்...லவ் யூ' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவர் யார்? புகழ் காதலிக்கிறாரா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். புகழுடன் நிற்கும் அந்த பெண்ணின் பெயர் ரியா. அவரும் சின்னத்திரை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புகழின் சக நண்பர்களான பவித்ரா, சிவாங்கி, யோகேஷ் ஆகியோரின் பதிவுகளில் இருந்து ரியாவும், புகழும் கடந்த சில நாட்களாக காதலித்து வருவதாக தெரிகிறது. சின்னத்திரை நடிகரான யோகேஷ் வெளியிட்டுள்ள பதிவில், ரியாவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிவிட்டு, ஒரு வழியாக புகழ் வெளியிட்டுவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் காதலித்து வரும் தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது புகழின் ரசிகர்கள் ரியாவின் சமூக வலைதளப் பக்கத்தை துரத்திப்பிடித்து பாலோ செய்து வருகின்றனர். மேலும் புகழும் ரியாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, 'அண்ணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என டிரெண்ட் செய்து வருகின்றனர்.