ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
டிக் டாக் பிரபலமான ஷோபனா விஜய் டிவியில் முத்தழகு என்ற புதிய சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
டிக் டாக் செயலி பட்டித்தொட்டியில் இருக்கும் பலரையும் பிரபலமாக்கி விட்டது. அந்த வரிசையில் பல ரசிகர்களை கவர்ந்து டிரெண்டிங்கில் இடம் பிடித்து வலம் வந்தவர் ஷோபானா. டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இதன் மூலம் அடைந்த புகழ் வெளிச்சம் ஷோபனாவை ஆல்பம், குறும்படங்கள், வெப் சீரீஸ் என அடுத்தடுத்த தளங்களுக்கு கொண்டு சென்றது. தற்போது திறமையான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷோபனா, இல்லந்தோறும் ரசிகர்களின் மனதை கொள்ளைக்கொள்ளும் வகையில் விஜய் டிவியின் புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார்.
கிராமத்து கதைக்களத்துடன் புத்தம் புதிய பொலிவுடன் தயாராகி வரும் முத்தழகு தொடரில் ஷோபனா ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் ஷோபனாவுக்கு தங்கள் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.