கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ராஜா சாப் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் விதமாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம் பிரபாஸ் தற்போது இயக்குனர் ஹனுராகவ புடி இயக்கத்தில் உருவாகி வரும் பாவ்ஜி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் இமான்வி (இவர் முழுப்பெயர் இமான் இஸ்மாயில்) என்பவர் அறிமுகம் ஆகிறார்.
இவர் சோசியல் மீடியாவில் குறிப்பாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் மூலமாக ஏற்கனவே அதிக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானவர். இவரது ரீல்ஸ் வீடியோக்கள், குறிப்பாக இவரது பரதநாட்டிய வீடியோக்கள் மூலமாக ரொம்பவே இம்ப்ரஸ் ஆன இயக்குனர் ஹனுராகவ புடி தனது படத்தின் கதாநாயகி இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்து அவரை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இமான்வியின் நடனமும் குறிப்பாக அவரது பவர்புல்லான கண்களும் எனக்கு ரொம்பவே பிடித்தன. நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தேன். முன்பு போல இயக்குனர்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கான தேர்வை தேடுவதற்கு சிரமப்பட வேண்டாம். அதற்கு சோசியல் மீடியா இப்போது ரொம்பவே உதவியாக இருக்கிறது. பலரும் தங்களது திறமைகளை போட்டி போட்டுக் கொண்டு சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வருவதால் நம் தேர்வு எளிதாகிறது” என்று கூறியுள்ளார்.