அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

கடந்த 2017ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சுவாமிநாதன். அந்த படத்தில் விதார்த், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பின்னர் கடந்தாண்டு மகாராஜா என்ற படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். பாக்ஸ் ஆபிஸில் 190 கோடி வசூலித்தது. அதையடுத்து சீன மொழியிலும் வெளியிடப்பட்டு பெரிய அளவில் வசூலித்தது.
இந்த நிலையில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நியூயார்க்கில் ஆஸ்கர் விருது பெற்ற பேடு மேன் என்ற படத்தின் ரைட்டர் அலெக்சாண்டர் டினெலாரிஸ் என்பவர் அழைத்து பாராட்டி இருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்திலன் சுவாமிநாதன், ‛‛இது போன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. வீட்டுக்கே என்னை அழைத்து அன்பு காட்டியதற்கு மிக்க நன்றி'' என்று ஒரு பதிவு போட்டு உள்ளார்.