பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
2025ம் ஆண்டில் நேற்றுடன் முடிந்த ஐந்து மாதங்களில் சுமார் 100 படங்கள் வரை வெளிவந்தன. அவற்றில், 'மத கஜ ராஜா, டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன்' ஆகிய படங்கள்தான் லாபகரமான படங்களாக அமைந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் படங்களில் சுமார் 150 கோடி வரை வசூலித்ததாகச் சொல்லப்படும் 'டிராகன்' படம்தான் அதிக லாபத்தைக் கொடுத்துள்ள படம் என்கிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி வெளியான இந்தப் படம் தற்போது 100வது நாளைத் தொட்டுள்ளது. இந்த ஆண்டின் முதலாவது 100 நாள் படம் இது.
சென்னையில் ஏஜிஎஸ் தியேட்டரில் மட்டும் இப்படம் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. 100வது நாளில் படம் வந்துள்ளதற்கு தயாரிப்பு நிறுவனம், நாயகன் பிரதீப் ரங்கநாதன், படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்டவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அஷ்வத், “நல்ல படைப்புகளை மீண்டும் மீண்டும் வழங்குவதன் மூலம் அன்பை செலுத்த முடியும். எங்கள் படத்தை அவர்களது படமாக நினைத்த ரசிகர்கள், பத்திரிகை ஊடகங்கள், இன்ப்ளுயன்சர்ஸ், மீம்ஸ் கிரியேட்டர்கள் ஆகியோருக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.