பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
சசிகுமார் நடிக்க மந்திரமூர்த்தி இயக்கிய அயோத்தி, ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிக்க, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங், அட்டக்கத்தி தினேஷ் நடிக்க, தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர்பந்து, விஜய் சேதுபதி நடிக்க, நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா படம் ஆகியவை வெற்றி படங்களாக அமைந்தன. இந்த இயக்குனர்கள் அடுத்த படத்தை இன்னும் தொடங்கவில்லை.
இது குறித்து விசாரித்தால், சிம்புவை வைத்து படம் இயக்க பூஜை போட்டார் பார்க்கிங் ராம்குமார். ஆனால், அவர் வட சென்னை 2வுக்கு சென்றுவிட்டதால் அந்த படம் தாமதம் ஆகிறது. ஆகவே, இன்னும் சில வாரங்களில் தனது புதுப்பட அறிவிப்பை வெளியிடப் போகிறார் ராம்குமார்.
அயோத்தி இயக்குனர் மந்திரமூர்த்தி டீன் ஏஜ் பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட கதையை இயக்கப்போகிறார். விரைவில் அந்த பட அறிவிப்பும் வர உள்ளது. ஏற்கனவே கோபுரம் பிலிம்ஸிற்கு இவர் ஒரு படம் பண்ணுவதாக அறிவிப்பு வந்தது. அந்த படம் தான் இதுவா.... அல்லது இது வேறு ஒரு தயாரிப்பிற்கா.... என்பது விரைவில் தெரியவரும்.
தனுஷை வைத்து படம் பண்ண முயற்சிக்கிறார் பச்சமுத்து. அடுத்த பட ஹீரோவுக்காக நித்திலனும் வெயிட்டிங். தலைவன் தலைவி என்ற ஹிட் படம் கொடுத்த பாண்டிராஜூம் அடுத்த பட ஹீரோவை இன்னும் அறிவிக்கவில்லை. சூரி நடித்த மாமன் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜன், மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் பட இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி ஆகியோரும் ஹீரோக்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று தகவல் வருகிறது.