பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர் ஆனந்தி. இங்கு 'பொறியாளன்' படத்தில் அறிமுகமாகி, 'கயல்' படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு 'சண்டி வீரன், விசாரணை, திரிஷா இல்லேன்னா நயன்தாரா, பரியேறும் பெருமாள், ராவணக்கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு அவர் நடித்த 'ஒயிட் ரோஸ்' என்ற படம் வெளியானது.
இந்த நிலையில் ஆனந்தி 'அரபிய கடலில்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த தொடர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. சத்யதேவ் நாயகனாக நடித்துள்ளார், வி.வி.சூர்யகுமார் இயக்கி உள்ளார்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் ஆந்திர மீனவர்கள் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட அவர்கள் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அங்கிருந்து அவர் எப்படி தப்பி வருகிறார்கள் என்பதும், அவர்களை மீட்க ஆனந்தி சட்டப்போராட்டம் நடத்துவதும்தான் படத்தின் கதை. இதே கதை அமைப்புடன்தான் சமீபத்தில் நாக சைதன்யா நடித்த 'தண்டேல்' என்ற படமும் வெளியானது.