ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழில் டிராகன் என்ற ஒரே படத்தில் தான் நடித்து இருக்கிறார் கயாடு லோகர். ஆனாலும் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அவரை சோஷியல் மீடியாவில் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார். ஆனால் கொஞ்ச காலத்தில் சர்ச்சையில் அடிபட்டார். சினிமா, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்தார். இப்போது. மீண்டும் நிகழ்ச்சிகளில் தலை காண்பிக்க தொடங்கியுள்ளர்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கயாடு, ‛‛இப்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் 5 படங்களில் நடித்து வருகிறேன். நான் அசாமை சேர்ந்தவள். ஆனால் என் தாய்மொழி நேபாளம்'' என்றார்.
இப்போது இதயம் முரளி படத்தில் அதர்வா முரளி உடன் நடித்து வருகிறார். ஜி.பி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சுந்தர் சி இயக்க விஷால் நடிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு ஜோடியாக அவர் நடிக்க இருந்த படம் டிராப் ஆகிவிட்டது.