மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது சமந்தா, நாக சைதன்யா பிரிவு விவகாரம். சில தினங்களுக்கு முன்பு இருவரும் தங்களது பிரிவைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சினிமா பிரபலங்கள் யாரும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடவில்லை.
ஆனால், 'தலைவி' பட நாயகியான கங்கனா ரணவத், அவர்கள் பிரிவு குறித்து தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆண்கள் செய்யும் தவறுகளால்தான் விவகாரத்துக்கள் ஏற்படுகின்றன என்று கூறியிருந்தார். மேலும், பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நாக சைதன்யா பழக ஆரம்பித்த பிறகு இது நடந்திருக்கிறது. அந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்துக்கு திறமையானர் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆமீர் கானுடன் நாக சைதன்யா ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அவரைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நாக சைதன்யாவின் மாமாவான தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் இன்ஸ்டா ஸ்டோரியில், “நாம் வாயைத் திறப்பதற்கு முன் நம் மனதைத் திறக்க வேண்டும். மனம் என்பது எண்ணங்களின் போக்குவரத்து. உங்கள் வழியை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கங்கனாவுக்குத்தான் வெங்கடேஷ் இப்படி மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார் என்கிறது டோலிவுட் வட்டாரம். எந்தவிதமான சர்ச்சைப் பதிவுகளையும் பதிவிடாத வெங்கடேஷ் இப்படி பதிவிட்டிருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.