நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

கடந்த வருடம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் கதாநாயகனாக நடித்து பெயர் பெற்றதோடு அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வசூலை அள்ளினார் மலையாள நடிகர் சவுபின் சாஹிர். கடந்த ஆகஸ்ட் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லனாக மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய அளவில் இன்னும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அவர் அடுத்ததாக நடித்துள்ள 'பாதி ராத்திரி' என்கிற படம் வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நவ்யா நாயர் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் ரதீனா இயக்கியுள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பார்வதி இருவரையும் முதன்முறையாக ஒன்றிணைத்து 'புழு' என்கிற படத்தை இயக்கியிருந்தார். ஆணவக் கொலையை மையப்படுத்தி வெளியான அந்த படம் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் இந்த 'பாதி ராத்திரி' படம் விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகி இருப்பதாலும் சவுபின் சாஹிர் அதில் கதாநாயகனாக நடித்திருப்பதாலும் இந்த படம் இயக்குனர் ரதீனாவுக்கு நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




