போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் |
தமிழ் சினிமா இயக்குனர் ஏஆர் முருகதாஸ், ஹிந்தியில் சல்மான் கான் நடிக்க 'சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கினார். இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் ஏஆர் முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியில் படத்தின் படப்பிடிப்புக்கு இரவு நேரத்தில் வந்த சல்மான் கான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.
அதற்கு பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியில் பதிலளித்துள்ளார் சல்மான் கான். “நான் படப்பிடிப்புக்கு இரவு 9 மணிக்கு வந்தது பிரச்னையை ஏற்படுத்தியதாக இயக்குனர் கூறியிருந்தார். அப்போது எனது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது. சமீபத்தில் அவரது படம் ஒன்று வெளியாகி இருந்தது, அந்தப் படத்தின் நாயகன் காலை 6 மணிக்கெல்லாம் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். அந்தப் படம் 'மதராஸி'. அந்தப் படம் 'சிக்கந்தர்' படத்தை விட பெரிய பிளாக்பஸ்டர் ஆக அமைந்துவிட்டதா என்ன?.
'சிக்கந்தர்' படத்தை முதலில் முருகதாஸ், தயாரிப்பாளர் சஜித் நடியத்வாலா ஆகியோர்தான் பார்க்க வேண்டியதாக இருந்தது. முதலில் சஜித் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் தென்னிந்தியப் படத்திற்காக முருகதாஸும் எஸ்கேப் ஆகிவிட்டார்,” என்று கூறியுள்ளார்.
ஒரே நேரத்தில் 'சிக்கந்தர், மதராஸி' ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி இரண்டையுமே தோல்விப் படமாக்கி உள்ளார் ஏஆர் முருகதாஸ். 'மதராஸி' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்று சொன்னார்கள். ஆனால், அந்தப் படத்தின் பட்ஜெட்டே 150 கோடி என்கிறார்கள்.
'சிக்கந்தர்' படத்தின் அவுட்டேட்டட் கதை, மோசமான விஎப்எக்ஸ் காட்சிகள் ஆகியவைதான் படத்தின் தோல்விக்குக் காரணம், சல்மான் அல்ல என ஹிந்தி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். மேலும், ஹிந்தியில் முன்னணி உள்ள நாயகனான சல்மான் கானை தனது தோல்விக்கு முருகதாஸ் குற்றம் சாட்டியதால் இனி அவருக்கு ஹிந்தி நடிகர்கள் வாய்ப்பு தர மாட்டார்கள் என்றே பாலிவுட்டில் சொல்கிறார்கள்.
தமிழிலும் 'மதராஸி' எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத காரணத்தால் அடுத்த பட வாய்ப்பு அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.