ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சர்வைவர் ஷோவில் கலந்து கொண்ட ஸ்ருஷ்டி டாங்கே தான் எலிமினேட் ஆனதை குறித்து எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆன காய்த்ரி மற்றும் ஸ்ருஷ்டிக்கு தனியாக போட்டி வைக்கப்பட்டது. இதில் ஸ்ருஷ்டி தோற்றுவிட்ட நிலையில் நிகழ்ச்சியிலிருந்து முழுவதுமாக வெளியேறியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 'டிவியில் நீங்கள் பார்ப்பது மிக குறைவு தான். கற்கால மனிதன் போல வாழ்வது எளிதல்ல. சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இப்படி ஒரு ஷோவுக்கு சென்றால் உங்கள் உடல், மனம் மீது அது பாதிப்பை ஏற்படுத்தும். நான் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை என்றாலும் போட்டியை சரியான இடத்தில் முடித்து இருக்கிறேன். நான் சர்வைவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனதை தோல்வியாக பார்க்கவில்லை. பெரிய வாய்ப்பை தொலைத்துவிட்டேன். இந்த வாய்ப்பு அளித்த ஜீ தமிழ் மற்றும் அர்ஜூன் சார் ஆகியோருக்கு நன்றி' என அதில் அவர் கூறியுள்ளார்.