ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருபவர் நிழல்கள் ரவி. இவர் பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளப்போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது 'பிக்பாஸில் இம்முறை கலந்து கொள்கிறீர்களா'? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள நிழல்கள் ரவி, “பிக் பாஸ் அழைப்பு எனக்கு வந்திருக்கிறது. நான் வருகிறேனா என்பது சஸ்பென்ஸ். அதை வெளியில் சொல்ல கூடாது என சொல்லி இருக்கிறார்கள்” என கூறினார். இதனால் இந்த சீசனில் நிழல்கள் ரவி கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.