ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அறிமுக நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தப்பிச் சென்ற விஜய்பாபு தற்போது திரும்பி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நடிகையின் சம்மத்துடன் தான் எல்லாம் நடந்தது. தற்போது திடீரென புகார் அளித்துள்ளார். இதற்கு பின்னால் சதி உள்ளது. கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று விஜய்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அந்த நடிகை, வழக்கை வாபஸ் பெற விஜய்பாபு தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: புகாரை வாபஸ் பெறுமாறு விஜய்பாபுவின் நண்பர் என்னிடம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். ஒரு கோடி ரூபாய் வரை தருவாகவும் அவர் சொன்னார். புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். என்று கூறியிருக்கிறார்.