இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
வளர்ந்து வரும் கன்னட நடிகர் சதீஸ் வஜ்ரா. லகோரி என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர் தற்போது சில படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். 36 வயதான சதீஸ் வஜ்ரா பெங்களூரு ஆர்ஆர் நகரில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அன்று முதல் சதீஸ் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த 2 மர்மநபர்கள் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்கள். ரத்தவெள்ளத்தில் மிதந்த சதீஸை கண்ட வீட்டு வேலைக்கார பெண் போலீசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சதீஸ் வீட்டு முன் இருந்த சிசிடிவி கேமராவில் கொலையாளிகளின் முகமும், அவர்கள் சதீஷின் பைக்கை எடுத்துச் சென்றதும் பதிவாகி உள்ளது. அதைக் கொண்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சதீசின் மனைவி தற்கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் கன்னட சினிமா உலவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.