காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கடந்து 35 வருடங்களுக்கு மேலாக நடிப்பை மட்டுமே கவனித்து வந்த மோகன்லால், முதன்முறையாக இயக்குனராக மாறி இயக்கிவரும் ‛பாரோஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து ஏற்கனவே ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தான் நடித்து வந்த ராம் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளார் மோகன்லால். இது அவரது 353வது படமாகும். பஹத் பாசில் நடித்த அதிரன் படத்தை இயக்கிய விவேக் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் முன்னாள் அமைச்சர் ஷிபு பேபி ஜான் என்பவர் தயாரிப்பாளராகவும் அடி எடுத்து வைத்துள்ளார்.
“எனது 35 வருட கால நண்பரை தயாரிப்பாளராக மாற்றி ஒரு புதிய பாதையில் அழைத்துச் செல்வதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால். ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் தான் நடித்துவரும் ராம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறியுள்ளார் மோகன்லால்.