மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் அவர் புதிய படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்ததால் அவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அந்த பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளது.
அதையடுத்து வடிவேலு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கத் தயாராகி உள்ளார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பில் சிறு சிக்கல் ஏற்பட்டுள்ளது. காமெடி நடிகர் சதிஷ் மற்றும் குக் வித் கோமாளி பவித்ரா நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் உருவாக உள்ளத்து. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
நாய் சேகர் என்ற தலைப்பு ஏஜிஎஸ் நிறுவனம் கைவசம் இருப்பதாகவும் வடிவேலு அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வடிவேலு படத்திற்கு நாய் சேகர் தலைப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது. தற்போதைய தகவல்படி நாய் சேகர் தலைப்பை ஏஜிஎஸ் நிறுவனம் விட்டுக் கொடுப்பதாக இல்லையாம். எனவே மீண்டும் நாய் சேகர், வடிவேலுவின் நாய் சேகர் போன்ற தலைப்புகளை வடிவேலு படக்குழு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.