மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் நடிகர் வடிவேலு. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சிம்புதேவன் - வடிவேலு இடையே ஏற்பட்ட பிரச்னையால் படப்பிடிப்பு நின்றுபோனது. இதன் காரணமாக தனக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாக வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். இதுகுறித்த பஞ்சாயத்துக்கள் நடந்து வந்ததால் வடிவேலு சில காலம் படத்தில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இப்பட பிரச்னை தீர்ந்ததால் மீண்டும் படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. முதலாவதாக சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் வடிவேலு காமெடியனாக நடித்த படங்களில் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி முக்கியமான படம். இந்த படத்தில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. தற்போது பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், சந்திரமுகி படத்தில் முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் வடிவேலு முக்கிய காமெடியனாக இடம்பெறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு முதல் பாகத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் வடிவேலுவுக்கான காமெடி காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது பி.வாசு ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன .