ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் இயக்கத்தில், கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தலைவி'. மறைந்த முதலமைச்சர், நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக இப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதே சமயம் படத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான உரிமையையும் விற்றிருந்தார்கள். அது பற்றி தெரிய வந்ததும் படத்தைத் தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்று தியேட்டர்காரர்கள் தெரிவித்தனர்.
நான்கு வாரங்களுக்குப் பிறகே படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும் என்பதை மீறி இரண்டு வாரங்களில் கொடுத்ததற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக நேற்று முதல் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது பேச்சு வார்த்தை முடிவடைந்துள்ளதாம். படத்தை நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிட மாற்றத்தைச் செய்கிறோம் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதாம். எனவே, படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.