மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் 'தலைவன் தலைவி'. இப்படம் தற்போது உலக அளவில் 75 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படம் வெளியான மூன்று நாட்களில் 25 கோடி வசூலையும், ஒரு வாரத்தில் 50 கோடி வசூலையும் பெற்றதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தற்போது 11 நாட்களில் 75 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி நடித்து இந்த வருடத்தில் வெளிவந்த முதல் படமான 'ஏஸ்' படம் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய நிலையில் இப்படம் 75 கோடி வசூலைக் கடந்து அவருடைய இறக்கத்தை ஏற்றி வைத்துவிட்டது.
விஜய் சேதுபதி தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்களில் 'மகாராஜா' படம் 200 கோடி வசூலை நெருங்கிய படமாக முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இப்போது 'தலைவன் தலைவி' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.