செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 71வது சினிமா தேசிய விருதில் ‛பார்க்கிங்' படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார். உள்ளொழுக்கு என்ற மலையாள படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பார்க்கிங் படக்குழுவினர் பார்ட்டி வைத்து இந்த சந்தோஷசத்தை கொண்டாடியிருக்கிறார்கள். கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் இவர்களை வாழ்த்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷை, ஊர்வசியையும் கமல்ஹாசன் வாழ்த்தியிருக்கிறார். ஆனால், தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் ஏனோ விருது பெற்றவர்களை வாழ்த்தவில்லை. அதற்கு மனமில்லையோ, நேரமில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பல முன்னணி சினிமா பிரபலங்கள் இவர்களுக்கு சோஷியல் மீடியாவில் கூட வாழ்த்து சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து சிம்புவை வைத்து படம் இயக்கப்போகிறார் பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இப்போது வெற்றிமாறன் படத்தில் நடிக்க இருப்பதால் அந்த பட வேலைகள் லேட்டாக தொடங்கும் என கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பு, இசை என பிஸியாக இருக்கிறார். அடுத்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் அவர் இசையமைத்த ‛தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர், வணங்கான்' உள்ளிட்ட பல படங்கள் மோத உள்ளன. ஆக, அவர் 3வது தேசிய விருதுக்கும் போட்டி போடுகிறார். ஊர்சியும், எம்.எஸ்.பாஸ்கரும் பிஸியாக நடித்து வருகிறார்கள்.