‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி | 100 கோடி வசூல் கடந்த 'மிராய்' | கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான் : மேடையில் அறிவித்த கவின் | இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி | பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் | இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை |
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதின் ஒரு பகுதியாக ஆன்லைன் சூதாட்ட செயலிகளை (ஆப்) அரசு தடை செய்தது.
இந்த செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர், நடிகையும் விசாரித்து வருகிறார்கள். சூதாட்ட பணத்தில் அவர்கள் சம்பளம் பெற்றிருந்தால் அதுவும் குற்றமாகும் என்கிற அடிப்படையில் அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.
அந்த வகையில் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்தேலா, மேற்கு வங்க நடிகை மிமி சக்ரவர்த்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.15) விசாரணைக்கு ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரத்தேலா தமிழில் சரவணன் நடித்த 'லெஜண்ட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.