விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

பார்க்கிங் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. ராம்குமார் பாலகிருஷ்ணன் அடுத்து சிம்புவின் 49வது படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென சிம்புவிற்கு வெற்றிமாறன் பட வாய்ப்பு வந்ததால் இவரின் படம் தள்ளிப்போகிறது. இதனால் வேறு ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் சமீபத்தில் நடிகர் விக்ரமை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்துள்ளதால் படமும் உறுதியாகியுள்ளதாம். இது விக்ரமின் 65வது படமாக உருவாகிறது. இதற்கான அறிவிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்கிறார்கள்.