சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ஒரு படம் வெற்றியடைந்ததுமே அந்தப் படம் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் சம்பளத்தை உயர்த்திவிடுவது வழக்கம். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளிவந்த 'தலைவன் தலைவி' படம் 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதற்காக இருவருமே அவர்களது சம்பளத்தை உயர்த்திக் கேட்டுள்ளார்களாம். ஆனால், அது குறித்து தயாரிப்பு நிறுவனம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகர்களுக்கான சம்பளம் மிக அதிகமாகிவிட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது சம்பளம் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விஜய் இனி நடிக்கப் போவதில்லை. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கடுத்துள்ள நடிகர்களில் 50 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்கள் தான் உள்ளனர். அவர்களில் சிலர் விரைவில் 100 கோடி சம்பளம் கேட்கத் தயாராக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.