அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் | ‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு |
2011ஆம் ஆண்டில் பாலா இயக்கி வெளியான படம் அவன் இவன். ஆர்யா-விஷால் இணைந்து நடித்த இந்த படம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை ஒட்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. அங்குள்ள சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தைப் பற்றி அவதூறாக சித்தரித்து காட்சிகள் படமாக்கப்பட்டிருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது.
அதையடுத்து சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் அவரது குலதெய்வான சொரிமுத்து அய்யனாரையும் அவன் இவன் படத்தில் அவதூறாக சித்தரித்ததாக இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன், டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் மீது வழக்கப்பதிவு செய்தார். ஆனால் கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்திடம் சமாதானம் பேசி அந்தவழக்கில் இருந்து விடுவித்துக்கொண்டார்.
அதையடுத்து டைரக்டர் பாலா, நடிகர் ஆர்யா இருவர் மீதும் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டபோதிலும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பின்னர் 2018ல் மீண்டும் அந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. அதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நேரில் ஆஜரான ஆர்யா, வருத்தம் தெரிவித்துக் கொண்டதை அடுத்து வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தன் மீதான வழக்கு விசாரணை வந்தபோது ஆஜராகாமல் இருந்து வந்தார் டைரக்டர் பாலா.
இந்நிலையில் இன்று அவரை கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனால் இன்று காலை 10.30 மணிக்கு அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் முன்பு ஆஜரானார் பாலா. அப்போது நடந்த விசாரணைக்குப்பிறகு பாலா மீதான வழக்கைத் தொடர்ந்தவர்கள் குற்றத்தை சரியாக நிரூபிக்கவில்லை என்று சொல்லி, பாலாவை அவன் இவன் படத்தின் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதையடுத்து என் மீது போடப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளேன் என்று டைரக்டர் பாலா தெரிவித்துள்ளார். ஆக, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அவன் இவன் பட வழக்கு இப்போது முடிவுக்கு வந்துள்ளது.