'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால் - சாய் தன்ஷிகா இன்று நிச்சயதார்த்தம் | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' |
சந்தானம் நடித்துள்ள படம் டிக்கிலோனா, அவருடன்யோகி பாபு, அனகா, ஷிரின் காஞ்ச்னவாலா, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அரவிந்த் ஒளிப்பதிவை மேற்கொள்ள, யுவன் சங்கர்ராஜா இசை அமைத்திருக்கிறார். அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி உள்ளார்.
கே. ஜே. ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படம் ஓடிடியில் வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. தற்போது அதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற செப்டம்பர் 10ம் தேதி வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் யோகி கூறியதாவது: சயின்ஸ் பிக்ஷன் டைம் ட்ராவல் ஜானரில் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையின் நாயகனான சந்தானம் டைம் ட்ராவலில் பயணித்து தன்னுடைய திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதுதான் கதை. என்றார்.