நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சந்தானம் நடிப்பில் கடைசியாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படம் திரைக்கு வந்தது. அதையடுத்து சிம்புவின் 49வது படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சந்தானம். அதோடு, சிம்புவுக்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்-2 படத்திலும் சந்தானத்தை காமெடி கலந்த ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினி நடித்த 'எந்திரன், லிங்கா' போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள சந்தானம், இந்த ஜெயிலர்-2 படத்தில் காமெடி கலந்த வேடத்தில் நடிக்க சம்மதிப்பாரா? மாட்டாரா? என்பது விரைவில் தெரியவரும்.