மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கடந்த ஆண்டு தனது பத்து ஆண்டுகால நண்பரான கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். அதோடு திருமணத்திற்கு பிறகும் நடிப்புக்கு எந்த தடையுமில்லை என்று அறிவித்தவர் தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழில் இந்தியன்-2, ஹேய் சினாமிகா, கோஷ்டி, கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர், ஹிந்தியில் உமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாரங்கல்லில் ஒரு ஷோரூம் திறப்பு விழாவுக்கு வந்திருந்த காஜல் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருமணத்திற்கு பிறகும் தன்னை சினிமா உலகம் ஆதரித்து வருவதை பெருமையாக சொல்லிக் கொண்டவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, தெலுங்கில் மேலும் இரண்டு மெகா பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதுகுறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ள காஜல், இப்படி நான் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருவதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவினால் தான் அதிகமான படங்களில் என்னால் கமிட்டாக முடிகிறது. தொடர்ந்து அவரது ஆதரவினால் சினிமாவில் இன்னும் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.