100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுமார் நான்கு மாத காலமாக தியேட்டர்களைத் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். மற்ற தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் தியேட்டர்களைத் திறக்க மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், “சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், வெப்ப நிலை பரிசோதனை மற்றும் தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னரே அனுமதிப்போம்,” என தெரிவித்துள்ளனர்.
மேலும், தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் தமிழக அரசுக்கும் வர வேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தியேட்டர்கள் சங்கத்தினரின் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தமிழக அரசு தியேட்டர்களைத் திறக்க உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது.