பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆர்ஆர்ஆர்' என்ற பீரியட் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்திற்காக பிரமோஷன் பாடல் ஒன்றை நாளை ஐதராபாத்தில் படமாக்க உள்ளாராம் ராஜமவுலி.
இந்தப் பாடலில் படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் கலந்து கொள்ளப் போகிறார்கள். இப்பாடலை படத்தின் பிரமோஷனுக்கு மற்றும் படத்தின் என்ட் டைட்டிலுக்குப் பயன்படுத்தப் போகிறார்களாம். இது மாதிரியான பாடல்களை தனது முந்தைய படங்களான 'மகதீரா, நான் ஈ' ஆகிய படங்களுக்காகவும் உருவாக்கியுள்ளார் ராஜமவுலி.
பிரமோஷன் பாடலின் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழு ஐரோப்பாவுக்குச் செல்லவிருக்கிறதாம். அங்கு ராம் சரண், ஜுனியனர் என்டிஆர் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கப் போகிறார்களாம். அதற்காக சமீபத்தில் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு இடங்களை ராஜமவுலி தேர்வு செய்துள்ளார்.
அக்டோபர் 13ம் தேதி படத்தின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது படக்குழு. 'பாகுபலி 2' படத்தை விடவும் இந்தப் படத்தை அதிக வியாபாரம் செய்யவும், வசூலைப் பெறவும் படக்குழு திட்டமிட்டுள்ளது என்கிறார்கள்.