வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை |

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ். கைவசம் தமிழிலேயே மூன்று படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் படத்தில் நடித்த இவர் விரைவில் வெளியாகவுள்ள விராட பர்வம் படத்திலும் சற்று நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
ராணா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி மற்றும் பிரியாமணி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் சாய்பல்லவியும், பிரியாமணியும் நக்சலைட்டாக நடித்துள்ளது போல, நிவேதா பெத்துராஜும் நக்சலைட் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.




