ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி அக்டோபர் 13-ல் படம் வெளியாகும் என்று மேக்கிங் வீடியோவில் அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்பு வரை அக்டோபரில் ஆர்ஆர்ஆர் வெளியாவது சந்தேகமாக இருந்து வந்ததால் அந்த மாதத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தின் முதல் பாகத்தை வெளியிட தயாராகிக்கொண்டிருந்தார்கள். ஆனால்ஆர்ஆர்ஆர் படம் ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்திருப்பதால் அப்படம் திரைக்கு வந்தபிறகு புஷ்பா முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யலாம் என்று தாமதம் செய்து வருகின்றனர். இதேபோல் ராஜமவுலியின் இந்த அறிவிப்பினால் மேலும் சில தெலுங்கு படங்களின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு வருகிறது.