ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி : மன்னிப்பு கேட்டு அறிக்கை | கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' |

மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இப்படம் பற்றிய அறிவிப்பையே டீசர் உடன் வெளியிட்டனர். அந்த டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது. வில்லன்களாக பஹத் பாசில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது வெளியிடப்பட்டுள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகிய மூன்று பேரையும் ஒரு போஸ்டரில் கொண்டு வந்துள்ளனர். இந்த போஸ்டரை பார்க்கும்போது கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி பட போஸ்டரை பார்ப்பது போன்று உள்ளது. ஆனால் விருமாண்டி போஸ்டரை சிறப்பாக வடிவமைத்து இருந்தனர். ஆனால் விக்ரம் போஸ்டரில் மூவரின் போட்டோக்களையும் அப்படியே ஒட்ட வைத்திருப்பது போன்று உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் இதை வரவேற்றுள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, ‛‛யுத்தத்தால் அதோ அதோ விடியுது... சத்தத்தால் அராஜகம் அழியுது... ரத்தத்தால் அதோ தலை உருளுது... சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது... துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்... என கமலின் விக்ரம் படத்தில் வரும் பாடலை பதிவிட்டுள்ளார்.
பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு நடிகர் கமல் தனது டுவிட்டரில், கமல் டுவிட்டரில், ‛‛வீரமே வாகையைச் சூடும். மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க. நேற்றே போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்... விக்ரம்...'' என பதிவிட்டுள்ளார்.