படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
வையாகாம்18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்திய சினிமாத் துறையின் முதல் முயற்சியாக மார்ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'பைட்டர்' எனும் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
சித்தார்த் ஆனந்த் கூறுகையில், ‛‛பைட்டர் திரைப்படம் எனது கனவு திட்டமாகும். இந்தப் படத்தின் மூலம் இந்திய திரைப்படத்தை உலக அளவில் கொண்டு செல்லவிருக்கிறோம். ரசிகர்களுக்கு பிரமாண்ட திரைப்படமாக அமையும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மனதில் கொண்டு தயாராகும் இப்படம் நவீன தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் பல இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த கதை உண்மையான இந்தியனைப் பற்றியதாகும். நமது ஆயுதப்படைகளின் வீரம், தியாகம் மற்றும் தேச பக்திக்கு வணக்கம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
வையாகாம்18 ஸ்டூடியோஸின் அஜித் அந்தரே கூறுகையில், வான்வெளியில் சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படமானது ஒரு தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்குகிறது. இதுபோன்று இந்தியாவில் எந்தவொரு படமும் வந்ததில்லை. 'டாப் கன்' என்ற ஆங்கில படத்தின் ரசிகன் என்ற முறையில் வான்வெளியில் அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தியாவை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த கதையை நான் தேடிக்கொண்டிருந்தேன். அதற்கான பதில் எனக்கு 'பைட்டர்' மூலம் கிடைத்துள்ளது. இயக்குனர் சித்தார்த் இதை புரிந்துகொண்டு தனது படங்களில் தனித்துவமான விஷயங்களை புகுத்தி வருகிறார். நான் அவருடன் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.