கொரில்லா பாணியில் நடந்த யெல்லோ படப்பிடிப்பு | தியாகராஜ பாகவதர் கதைக்கும், காந்தாவுக்கும் தொடர்பா? | ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு |

நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ். அவர் இயக்கிய ‛நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தபடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கு அடுத்த படமாக பவிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நாக துர்கா என்பவர் அறிமுகமாகிறார். இதை தனஞ்செயன் தயாரிக்கிறார்.
சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வந்ததோடு பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர். அதன்படி படத்திற்கு ' லவ் ஓ லவ்' என பெயரிட்டு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் வலைதளத்தில் வெளியிட்டார். காதல் கதையில் உருவாகும் இப்படம் இன்றைய இளம் காதலர்களின் காதல், மோதலை வைத்து உருவாகிறது.