பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹரி மகாதேவன் இயக்கத்தில் ‛பிக்பாஸ்' பூர்ணிமா ரவி நடித்த படம் ‛யெல்லோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரில்லா மேக்கிங் முறையில் நடந்ததாம். அதாவது, நடிகர், நடிகைகள், படக்குழுவினர் ஒரு வேனில் கிளம்பி ஆங்காங்கே படப்பிடிப்பு நடத்தினார்களாம். சிலசமயம் பல மணி நேரம் தொடர்ச்சியாகவும் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். பல முக்கியமான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் தயாரிப்பாளர் தனது கம்பெனிக்கு சொந்தமான லென்ஸ், படப்பிடிப்பு கருவிகளை விற்று கஷ்டப்பட்டு இந்த படத்தை முடித்து இருப்பதாக தகவல். இதில் புதுமுக ஹீரோ இருந்தாலும் படத்தை தொடர்ச்சியாக நடத்த ஹீரோயின் பூர்ணிமா தான் அதிகம் உதவியிருக்கிறார். படக்குழுவை ஒருங்கிணைத்து இருக்கிறார் என தகவல். இதில் இயக்குனர் பிரபுசாலமன் சிறப்பு வேடத்தில் வருகிறார். மறைந்த டில்லி கணேஷ் முக்கிய கேரக்டரில் நடித்து இ ருக்கிறார். படம் டிசம்பர் 21ல் ரிலீஸாகிறது.