மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அவர் மஞ்சள் கயிறால் ஆன தாலியை மட்டுமே அணிந்து வந்தார்.
திருமணத்தின் போது கட்டப்படும் அந்த மஞ்சள் தாலியை சில நாட்களுக்குப் பிறகு, அல்லது சில வாரங்களுக்குப் பிறகு தங்கத் தாலியாக மாற்றி கட்டிக் கொள்வார்கள். கீர்த்தி சுரேஷ் சுமார் இரண்டு மாதங்கள் வரையில் மஞ்சள் கயிறு தாலியை மட்டுமே அணிந்து வந்தார். தற்போது அந்த மஞ்சள் கயிறு அணிவதை நிறுத்தியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்க செயின் ஒன்றை மட்டும் அணிந்திருந்தார். மஞ்சள் கயிறுக்குப் பதிலாக தங்கத் தாலியை மாற்றியுள்ளாராம். ஆனால், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது அந்தத் தங்கத் தாலி இல்லாமல்தான் கலந்து கொண்டுள்ளார். கீர்த்தி நடிக்கும் நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸான 'அக்கா'வில் அவர் அணிந்த தங்க செயினைத்தான் நிகழ்ச்சிக்கும் அணிந்து வந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் 'ரிவால்வர் ரீட்டா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.