திகில் படத்தில் நடிக்க வேண்டும்: 'மதராஸி' அக்ஷய் கிருஷ்ணா ஆசை | அஜித் அளித்த வாழ்க்கை பாடம் சிபி சந்திரன் சிலிர்ப்பு | 3 நாட்களில் 200 கோடி வசூலித்த 'ஓஜி' | விஜய் சேதுபதி படத் தலைப்பு அறிவிப்பு தள்ளிவைப்பு | நிவின்பாலியின் 'சர்வம் மாயா' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தவப்புதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆதிபுருஷ் - ஞாயிறு திரைப்படங்கள் | பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் |
ராயன் படத்தை அடுத்து குபேரா, இட்லி கடை போன்ற படங்களில் நடித்து வரும் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் என்பவர் நாயகனாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இளஞர்களின் காதல் கதையாக உருவாகி உள்ள இப்படம் பிப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதோடு காதல் பெயில் என்ற பாடலில் தனுசும், கோல்டன் ஸ்பாரோ என்ற பாடலில் பிரியங்கா மோகனும் நடனமாடியுள்ளார்கள். தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள புள்ள என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பாடலை தனுஷ் எழுத, ஜிவி பிரகாஷ் பாடி உள்ளார்.