லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களிலும் யஷ்க்கு ஜோடியாக நடித்தவர் கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி. கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் கன்னடத்தில் வெளியான போதும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டதால் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமாகிவிட்டார் ஸ்ரீநிதி ஷெட்டி. அந்த படத்தை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் வித்தியாசமான காஸ்டியூம்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது மஞ்சள் நிற உடையில் தேவதையாக ஜொலிக்கும் போட்டோக்களையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப் பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.