ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தமிழக முதல்வரிடம் 2 கோடி ரூபாய் நிதி வழங்கியது. அதை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதற்கான காசோலையை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், லைகா முதன்மை செயல் அலுவலர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆர்.கே.செல்மணி கூறியதாவது: கொரோனா தொற்றின் முதல் அலையை விட இந்த முறை தான் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை திரைப்பட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். கடந்த முறை நடிகர், நடிகைகள் அதிக அளவில் நிவாரண உதவிகள் வழங்கினார்கள். இந்த ஆண்டு குறைவாக இருக்கிறது. தற்போது லைக்கா நிறுவனம் கொடுத்திருக்கும் தொகைதான் அதிகமானது. நடிகர், நடிகைகள் இன்னும் உதவ வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம். தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தியேட்டர்களும் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்றார்.