டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க சம்மேளனத்திற்குமிடையை மோதல் போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்' என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக பெப்சி குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.
இதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என்று இரு தரப்பும் கலந்தாலோசித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்று நடக்கும் விசாரணையில் மத்தியஸ்தர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.