லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகராக புகழ் பெற்றவர் மேஜர் சுந்தர்ராஜன். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் 6 படங்களை இயக்கி உள்ளார். அவர் இயக்கிய படங்களில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்ற படம் அவரது முதல் படமான 'அந்த ஒரு நிமிடம்'. இந்த படம் தெலுங்கில் 'டொங்கலா வேட்டக்காடு' என்ற பெயரிலும், ‛மகான்' என்ற பெயரில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, அஞ்சு மகேந்திரன், ஜெயமாலினி, அனுராதா, பண்டரிபாய், வேணு அரவிந்த் உள்பட பலர் நடித்திருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் வில்லனாக நடித்திருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார்.
போலீஸ் விசாரணையில் நீதி கிடைக்காத ஒரு கொலை வழக்கை ஒரு வழக்கறிஞரே கண்டுபிடித்து நீதியை நிலைநாட்டுவது தான் படத்தின் கதை. அந்த இளம் வழக்கறிஞராக கமல்ஹாசன் நடித்திருந்தார். அவரது காதலியாக ஊர்வசி நடித்திருந்தார். இளையராஜாவின் பாடல்கள் ஹிட்டானது. என்றாலும் படம் சுமாரான வரவேற்பை பெற்றது.