லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
எம்ஜிஆர் நடிப்பில் 1951ல் வெளியான படம் ‛மர்மயோகி'. ராஜ குமாரி வெற்றிக்கு பிறகு அவர் நடித்த படம் இது. எம்ஜிஆரை புரட்சி நடிகராகவும், அரசியலில் குறிப்பிடத்தக்க தலைவராகவும் மாற்றிய படம். இந்தப் படத்தில் எம்ஜிஆர் உடன் செருகளத்தூர் சாமா, 'ஜாவர்ட்' சீதாராமன், எம்.என். நம்பியார், அஞ்சலி தேவி, மாதுரி தேவி, பண்டரி பாய் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. கே.ராம்நாத் இயக்கினார்.
எம்ஜிஆர் ஹாலிவுட் நடிகர்களான டக்ளஸ் பேர்பேங்க்ஸ் மற்றும் எரோல் ப்ளைன் ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தார். அவர்கள் நடிப்பதை போன்று தானும் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால் இயக்குனர் ஏ.எஸ்.ஏ சாமியிடம் ஒரு கதை தயார் செய்யச் சொன்னார். மேரி கோரெல்லியின் "வெஞ்சன்ஸ்" நாவலிலிருந்தும், ராபின் ஹூட்டின் கதையிலிருந்தும் படத்தின் கரு உருவானது. அதனை தமிழ்நாட்டுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை எழுதினார் சாமி.
இது போன்ற ஆக்ஷன் படங்களுக்கு பிரதாபன், பார்த்திபன், ராஜசிம்மன் என்பது மாதிரியான பெயர்கள் வைப்பார்கள். ஆனால் இவைகள் சமஸ்கிருத பெயர் என்பதால் எம்ஜிஆர் படத்திற்கு 'கரிகாலன்' என்று பெயர் வைத்தார். முதலில் அப்படியே விளம்பரமும் செய்யப்பட்டது. படத்தின் தலைப்பை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும் இது சோழ மன்னன் கரிகாலனின் வரலாற்று கதை என்று கருதினார்கள். இதை புரிந்து கொண்ட எம்ஜிஆர், பின்னர் படத்திற்கு 'மர்மயோகி' என்று பெயர் வைத்தார். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் ஏ சான்றிதழ் பெற்ற படமும் இது ஆகும்.