ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
தொண்ணூறுகளில் அறிமுகமாகி இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் தனி ஒருவன் படத்தின் மூலம் வில்லனாக தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அரவிந்த்சாமி, அதில் வெற்றிக்கொடி நாட்டியதுடன், அதன் ரீமேக்காக தெலுங்கில் ராம்சரண் நடித்த துருவா' படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்க துவங்கி விட்டார். இப்போது கூட அவர் ஹீரோவாக நடித்து அரை டஜன் படங்களுக்கு மேல் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில் மீண்டும் தெலுங்குப்படம் ஒன்றுக்காக ஸ்டைலிஷான வில்லனாக மாற இருக்கிறாராம் அரவிந்த்சாமி.. நாகார்ஜுனா-அமலாவின் வாரிசான அகில் நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்க உள்ளார் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி. ஆக்சன் கதையம்சத்துடன் உருவாகும் இந்தப்படத்தில் தான் வடிவமைத்த பவர்புல்லான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் சுரேந்தர் ரெட்டி..