ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? |
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 25வது படமாகும். அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கார்த்தியின் அடுத்தப்பட பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்தை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அரவிந்த் சாமி இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.